பணம் மோசடி செய்த பாகிஸ்தான் பெண் கைது!

கனடா அனுப்பி வைப்பதாக கோரி பண மோசடி செய்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக கல்கிஸ்ஸை விசேட குற்றபுலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த பாகிஸ்தானிய பெண் வெளிநாட்டு கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்தி தரவதாக கோரி ஒரு மில்லியனுக்கு அதிகமான பணத்தை பெற்றுகொண்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கல்கிஸ்ஸை குற்றபுலனாய்வு பிரிவனர் தெரிவத்துள்ளனர்.

இது குறித்து குற்றபுலனாய்வு பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,

சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் பெண் நேற்று 11.45 மணியளவில் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கிஸ்ஸை டெம்பல் வீதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு படிப்புகளுக்கென கனடா அனுப்பி வைப்பதாக பொய் கூறி இது வரையில் 1 மில்லியன் 5 இலட்சத்து 79 ஆயிரத்து 650 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் குற்றபுலனாய்வு பிரிவினரின் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் குறித்த பாகிஸ்தான் பெண் 39 வயதுடையவர். அத்துடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!