சாய்ந்தமருது குண்டு வெடிப்பு சம்பவம் – உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்க அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீண்டும் தோண்டியெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சஹ்ரானின் சகோதரரான மொஹமட் ரில்வானினால் தற்காலை குண்டுத் தாக்குதலொன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது 17 பேர் உயிரிழந்ததாக விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட போதும், புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜெஸ்மினின் உடல் பாகங்கள் காணப்பட்டதாக உடற் கூற்று பரிசோதன போது கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தற்காலைத் தாக்குதலின் போது உயிழரிழந்த நபர்களின் உடல் பாகங்களை மீண்டும் தோண்டியெடுத்து பரிசோதனைக்கு உற்படுத்துவதற்கு விசாரணை அதிகாரிகளினால் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அம்பாறை பொது மயானத்தில் நாளை காலை குறித்த உடல் பாகங்களை மீண்டும் தோண்டியெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!