20 ஆண்டுகள்… 20 கொலைகள்: – தமிழகத்தை அதிரவைக்கும் பழிக்குப்பழி கொலை சம்பவங்கள்!

இராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது மதுரையை சேர்ந்த நாகமணி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் தி.மு.க-வைச் சேர்ந்த வி.கே.குருசாமிக்கும், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராஜபாண்டிக்கும் இடையே நீடித்து வரும் பகையின் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் 20 கொலைகள் நடந்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நேற்று நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது, மதுரை பராசக்தி நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் நாகமணி என்பவர் பயங்கரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் காவல்துறையினர் குற்றவாளி ஒருவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், குற்றவாளி குருசாமி கோஷ்டியைச் சேர்ந்த பூவலிங்கம் கொலை செய்ய வந்திருக்கின்றனர்.

ஆனால் அதனை சுதாரித்துக்கொண்டு பூவலிங்கம் தப்பித்து விட, அவனுடன் வந்த நாகமணியை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த கொலை சம்பவத்திற்கும், குருசாமி – ராஜபாண்டி இடையே நிலவி வரும் பகைக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமோ என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சமீபத்தில் கூட ராஜபாண்டி ஆட்களை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போதே வெடித்து, குருசாமியின் ஆட்கள் இரண்டு பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!