சாவின் விளிம்பில் இருக்கும் சுவாமி நித்தியானந்தா!

சுவாமி நித்தியானந்தா பாலியல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேற்பட்ட வழக்குகளில் போலீசார் தேடி வருகின்றனர். ஆனாலும், இதுவரை சிக்காமல் அவ்வப்போது வீடியோ மூலம் தரிசனம் அளித்து வருகிறார்.

தலைமறைவாக இருந்த நிலையிலேயே கைலாசா என்ற தீவை வாங்கிவிட்டதாகவும் அதை ஒரு நாடாக அங்கீகரிக்கக்கோரியும் உலக அரசை உலுக்கி எடுத்தார். இதுமட்டுமின்றி கைலாசாவிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம், வாருங்கள் மகிழ்ந்து வாழலாம் என்று எல்லாம் டைலாக்குகளை பதிவிட்டு போலீஸாருக்கு தண்ணீர் காட்டி வந்தார்.
    
இதனிடையில், சுவாமி நித்திக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், மோசமான நிலையில், நித்தியானந்தா இருப்பதாகவும் வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மேலும், அவர் இறந்துவிட்டார் எனவும், அவரது சொற்பொழிவு வீடியோக்கள் தற்போது எடுக்கப்பட்டவை அல்ல என்றும், அவை முன்பு எடுக்கப்பட்ட வீடியோக்களின் எடிட்டுகள் என்றும் பரவலாக பேசப்பட்டது.

பின்னர் அவர் சாவின் விளிம்பில் இருப்பதுபோன்ற வீடியோக்களும் வெளியிடப்பட்டன. இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கடந்த மே மாதம் 11 ஆம் தேதியில் நித்தியானந்தா தனது மரண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கமளித்துள்ளார்.

அதில், எனக்கு உடல்நிலை சரியில்லை. 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.

மேலும், தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை. மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை.

உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடலுக்கு என்ன ஆயிற்று என தெரியவில்லை. மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனக்கு அறிமுகமானவர்களைக்கூட அடையாளம் கண்டுக் கொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை.

ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!