பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு இந்திய உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 142 ஆவது பிரிவின் படி உயர்நீதிமன்றத்துக்குக் காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 161 ஆவது பிரிவின் படி தமிழக ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியமையை பேரறிவாளனை விடுதலை செய்ய உயர்நீதிமன்றத்தை கட்டாயப்படுத்தியுள்ளதாக தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட ஏனைய 6 பேரையும் விடுதலை செய்ய குறித்த தீர்ப்பு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!