சிறுவர் வைத்தியசாலையில் மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு: ஜகத் விஜேசூரிய

லேடி ரட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.

மருந்துப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜகத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

மிகவும் அத்தியாவசியமான 50 மருந்துப் பொருட்கள், சத்திர சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களுக்கும் இவ்வாறு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சிறுவர் வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ள உள்நாட்டு வெளிநாட்டு கொடையாளிகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் உதவிகளை வழங்குமாறும் வைத்தியர் விஜேசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!