உக்ரேனிய குழந்தைகளுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் எழுதிய கடிதம்!

பிரித்தானிய பிரதமர் உக்ரேனிய குழந்தைகளுக்கு இதயப்பூர்வமான கடிதம் ஒற்றை எழுதியுள்ளார். “அனைத்து குழந்தைகளுக்கும்: நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்” என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
    
அந்த கடித்ததில், போர் தொடங்கியதில் இருந்து அவர்கள் காட்டிய தைரியத்தை உலகம் முழுவதும் நினைவில் கொள்ளும் என்று ஒவ்வொரு உக்ரேனிய குழந்தையின் துணிச்சலைப் பாராட்டிய ஜான்சன், “பிரித்தானியாவில் உள்ள நாங்கள் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டோம்” என்றார்.
“எந்தக் குழந்தையும் பார்த்திடக் கூடாத விடயங்களை காட்சிகளை உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள் அல்லது அனுபவித்திருப்பீர்கள்” என்று எழுதியுள்ளார்.

மேலும் உக்ரைனின் குழந்தைகளைப் புகழ்ந்து, அவர்கள் “உங்கள் நாடு, உங்கள் பெற்றோர், உங்கள் குடும்பங்கள் மற்றும் உங்கள் வீரர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக உங்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும்” என்பதை மனதில் கொள்ளும்படி அதில் கேட்டுக்கொண்டார்.

மேலும், “நீங்கள் தனியாக இல்லை… நீங்கள் வீட்டில் உங்கள் நண்பர்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள் உகளுக்காக உள்ளனர். இந்தப் போரில் உக்ரைன் வெற்றிபெறப் போகிறது. இங்கே பிரித்தனையாவல், நாங்கள் உக்ரேனியக் கொடிகளை எங்கள் வீடுகள், அலுவலகங்கள், தேவாலயங்கள், கடைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பறக்க விடுகிறோம், டவுனிங் தெருவில் உள்ள எனது சொந்த கூரையிலிருந்தும் கூட” என்றார்.

“பிரித்தானிய குழந்தைகள் வரைந்த சூரியகாந்திகளால் ஜன்னல்கள் நிரப்பப்படுகின்றன. எங்கள் குழந்தைகள் உங்கள் ஓவியங்களை வரைகிறார்கள். உங்கள் நாட்டிற்கு ஆதரவாக அவர்களின் வகுப்பறைகளில் கொடி மற்றும் நீலம் மற்றும் மஞ்சள் வளையல்களை உருவாக்குகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தப் போரில் உக்ரைனின் வெற்றியில் தனது நம்பிக்கையை வலியுறுத்திய பிரதமர் போரிஸ் ஜான்சன், “உங்கள் ஜனாதிபதியைப் போலவே, உக்ரைன் இந்தப் போரில் வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன். விரைவில் ஒரு நாள், நீங்கள் உங்கள் வீடுகளுக்கும், பள்ளிகளுக்கும், உங்கள் குடும்பங்களுக்கும் சுதந்திரமாகத் திரும்புவீர்கள் என்று நான் முழு மனதுடன் நம்புகிறேன். எது நடந்தாலும், நீண்ட காலம் எடுக்கும், பிரித்தானியாவில் நாங்கள் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டோம், உங்களை எங்கள் நண்பர்கள் என்று அழைப்பதில் பெருமைப்படுவோம்” என்று அந்த கடிதத்தை முடித்தார்.

UNICEF-ன் கூற்றுப்படி, இரண்டு மில்லியன் குழந்தைகள் உக்ரேனை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் போலந்திற்கு வந்துள்ளனர், மேலும் 2.5 மில்லியன் குழந்தைகள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!