மஹிந்தவை நீக்கியது – அரசியல் வாழ்வின் கடினமான முடிவு!

மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எடுத்த முடிவு எனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவாகுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
    
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த கடினமான தீர்மானத்தை நாட்டுக்காகவே நான் எடுத்தேன். நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே எடுத்தேன். தேவையான மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதற்கு தான் தயார் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். என்னுடைய விருப்பத்தின் பேரிலேயே, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட விருகிறது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தது. அவர் மீதிருந்த நம்பிக்கையில் ஆகும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த நம்பிக்கையின் அடிப்படையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!