விடுமுறை நாட்களை மட்டுப்படுத்த நடவடிக்கை!

வருடாந்த பாடசாலை கால அட்டவணையின் பிரகாரம் வழங்கப்படும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்களவு மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    
கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கல்விக்கு முன்னுரிமை அளித்து பாடசாலைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபையினால் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!