அடுத்துவரும் வடக்கு மாகாணசபை நிர்வாகமானது செயலூக்கம் கொண்டதாக அமைய வேண்டும்

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் ஒரு­வாறு நடந்து முடிந்து ஆட்­சியை அமைக்­கின்ற வேலை­க­ளும் பூர்த்­தி­ ய­டைந்து­ விட்­டன. தமி­ழர் பகு­தி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அநே­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் நிர்­வா­ கத்­தைப் பொறுப்­பேற்­றுள்­ளது.

வடக்கு மாகாண சபை­யின் ஆயுட் காலம் எதிர்­வ­ரும் செப்­ரம்­பர் மாதத்­து­டன் நிறை­வு­பெ­ற­ வி­ருப்­ப­தால் அதற்­கான தேர்­த­லும் இடம்­பெ­ற­வேண்­டும். பழைய தேர்­தல் முறை­மை­யின் கீழ் மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்­தல்­கள் இடம்­பெ­று­மென ஊகம் வௌி யி­டப்­பட்­டுள்­ளது. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கிடைத்த கசப்­பான அனு­ப­வங்­கள் இந்த முடி­வுக்­குக் கார­ண­மாக ஆகி­யி­ருக்­கக்­கூ­டும்.

எதிர்­வ­ரும் வடக்கு மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தெரிவு இல­கு­வா­ன தொன்­றாக அமை­யப்­போ­வ­தில்லை

வடக்கு மாகாண சபைக்­கான முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரின் தெரிவு, கடந்­த­முறை போன்று இம்­முறை இல­கு­வா­ன­தாக இருக்­கப்­போ­வ­தில்­லை­யென்­பது இப்­போதே தெரிய ஆரம்­பித்து விட்­டது. தற்­போது முத­ல­மைச்­சர் பத­வியை வகித்­து­வ­ரும். சி.வி. விக்­னேஸ்­வ­ரன் அடுத்த தட­வை­யும் பதவி வகிப்­ப­தில் உள்ள தமது விருப்­பத்தை சூசகமாக வெளிப்படுத்தி யுள்ளார்.

ஆனால், அவ­ருக்கு நெருக்­க­மான சிலர் விக்­னேஸ்­வ­ரனை மீண்­டும் முத­ல­ மைச்­சர் வேட்­பா­ள­ராக நிய­மிப்­ப­தற்கு விரும்­பு­வ­தா­கத் தெரி­கின்­றது. ஆனால் கூட்­ட­மைப்­பின் சார்­பில் அவர் நிறுத்­தப்­படு­வதற்­கான சாத்­தி­யம் மிகக் குறை­வா­னதா­கவே காணப்­ப­டு­கின்­றது.

கூட்­ட­மைப்­பின் தலைமை, விக்­னேஸ்வரனை முத­ல­மைச்­சர் பத­வி­யில் அமர்த்­திய போதி­லும் அவர் அதற்­கான விசு­வாசத் தைக் காட்­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை. கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்போதே அவர் தமது உண்­மை­யான சுய­ரூ­பத்­தைக் காட்­டி­விட்­டார்.

தேர்­தல் பரப்­பு­ரை­க­ளில் ஈடு­ப­டா­மல் அவர் ஒதுங்கி நின்­றமை இதைத் தௌிவாக எடுத்­துக் காட்­டி­விட்­டது. தமிழ் மக்­கள் பேரவை ஆரம்­பிக்­கப்­பட்ட போது கூட்­ட­மைப்பின் விருப்­பத்துக்கு மாறாக அதில் இணைந்து கொண்­ட­து­டன் இணைத்­த­லை­வர் பத­வி­யை­யும் ஏற்­றுக் கொண்­டார்.

தமக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை கொண்டு வரப்­பட்­ட­போது, வடக்கு முத­ல­மைச்­சர் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளின் ஆத­ர­வைத் திரட்­டு­வ­தில் ஈடு­பட்­டார். மாற்­றுத் தலைமை தொடர்­பான சிந்­தனை எழு­வ­தற்­கும் இவரே கார­ண­மாக இருந்­துள்­ளார்.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் போதும் கூட்­ட­மைப்­பி­ லி­ருந்து விலகி நின்­றுள்­ளார். கூட்­ட­மைப்பு இக்­கட்­டா­ன­தொரு சூழ்­நி­லை­யில் இருந்­ததை இவர் அறிந்து கொண்டபோதி­லும் அதற்கு ஆத­ர­வான பரப்­பு­ரை­க­ளில் இவர் ஈடு­ப­ட­வில்லை.

எப்­போ­துமே கூட்­ட­மைப்பை விமர்­சிக்­கும் வழக்­கம் கொண்ட
வடக்கு முத­ல­மைச்­சர்

ஆனால் தேர்­தல் முடி­வு­கள் வௌிவந்­த­போது கூட்­ட­மைப் பின் பிர­தான பங்­கா­ளி­யான தமி­ழ­ர­சுக் கட்­சியை எள்ளி நகை­யா­டும் விதத்­தில் கருத்­துக்­களை வௌியிட்­டார். தேர்­தல் முடி­வு­கள் தமி­ழ­ர­சுக் கட்­சிக்கு ஒரு நில­ந­டுக்­க­மா­கவே அமைந்­து­விட்­ட­தென அவர் கூறி­யதை என்­றுமே மறுக்க முடி­யாது.

தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வெற்றி பெற்­றி­ருக்­கு­மா­னால், கூட்­ட­மைப்பு தர்­ம­சங்­க­ட­மா­ன­தொரு நிலையை எதிர்­கொண்­டி­ருக்­கும். ஆனால் தலைமை அமைச்­சர் பெற்ற வெற்றி அதைக் காப்­பாற்­றி­விட்­டது என்ற போதி।­­லும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான சம்­பந்­த­னுக்கு எதி­ரா­கக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் பெரும் சவா­லாகவே மாறி­விட்­டது.

இதன் வாக்­கெ­டுப்­பின்­போது கூட்­ட­மைப்­பின் நண்­பர்­கள் யார்? எதி­ரி­கள் யார்? என்­ப­தும் தெரிந்­து­வி­டும்.

இந்த நிலை­யில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் பத­விக்­குப் பொருத்­த­மான ஒரு­வரை வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்­டிய முக்­கி­ய­மான பொறுப்பு கூட்­ட­மைப்­புக்கு உண்டு. இந்த முறை கடந்த முறை போலன்றி தேர்­த­லில் கடு­மை­யான போட்டி நில­வு­மென்­பதை எதிர்­பார்க்க முடி­யும்.

இந்த நிலை­யில் மக்­க­ளது ஏகோ­பித்த ஆத­ரவை ஈட்­டக்­கூ­டிய ஒரு­வரை வேட்­பா­ள­ராக நிய­மிக்­க­வேண்­டிய அவ­சி­ய­தேவை ஏற்­பட்­டுள்­ளது.

ஆளு­மைத் திறன் மிக்­க­வர்­கள் மாகாண சபை வேட்­பா­ளர்­க­ளாக
களம் இறக்­கப்­ப­டல் வேண்­டும் கூட்­ட­மைப்பு எதைச் செய்­தா­லும் அதில் குறை காண்­கின்ற மன­நி­லை­யில் சிலர் உள்­ள­னர்.

அவர்­கள் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான வதந்­தி­க­ளைப் பரப்பி விடு­வ­தி­லும் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். மக்­க­ளில் ஒரு­ப­கு­தி­யி­னர் இவர்­கள் சொல்­வ­தை­யெல்­லாம் ஏற்­றுக்­கொள்­வ­தை­யும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

மக்­க­ளின் இந்த தவ­றான நட­வ­டிக்­கை­கள் களைந்­தெ­றி­யப்­ப­டல் வேண்­டும். இதற்கு ஆளுமை மிக்­க­வர்­கள் மாகா­ண­ச­பைக்­கான தேர்­தல் காலத்­தில் களம் இறக்­கப்­ப­டல் வேண்­டும். இதில் பிர­தா­ன­மா­னது முத­ல­மைச்­ச­ருக்­கான வேட்­பா­ளர் தெரிவு என்­பதைச் சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை.

முத­ல­மைச்­ச­ருக் கான வேட்­பா­ளர் தெரி­வில் கடந்த முறை ஏற்­பட்ட தவ­று­க­ளைச் சீர்­செய்­வ­தற்கு கூட்­ட­மைப்பு திணறி வரு­வ­தைப் போன்­ற­தொரு நிலை இனி­யும் உரு­வா­கி­வி­டக் கூடாது. ஆகவே கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­கள் தீர்க்­க­மாக ஒன்று கூடி ஆராய்ந்து மக்­க­ளால் ஏற்கப்படத்தக்க, தகுதி வாய்ந்த ஒரு­வரை முத­ல­மைச் சர் வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்­டும்.

மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் சென்ற தடவை போன்று அமோக வெற்­றி­யைப் பெறு­வ­தற்கு இது மிக­வும் உப­யோ­ க­மா­ன­தாக விளங்­கும். என்­ன­தான் இருந்­தா­லும் விக்­னேஸ்­வ­ ரனை முன்­நி­றுத்தி ஆதாயம் பெறு­வ­தற்கு எதிர்த்­த­ரப்­பி­னர் முயற்­சிக்­கவே செய்­வார்­கள். இதற்­குத் தகுந்த பதி­ல­டியை வழங்­கு­வ­தும் கூட்­ட­மைப்­பின் தலை­யாய கட­மை­யா­கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!