ஜோர்டான் நாட்டில் பயங்கரம்: மஞ்சள் நிற குளோரின் வெடித்து 13 பேர் பலி!

ஜோர்டான் நாட்டின் கப்பல்துறை முகத்தில் ஏற்றுமதி செய்யப்பட இருந்த குளோரின் வாயு தொட்டி, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்துடன் 250 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜோர்டானின் அகபா பகுதியில் உள்ள கப்பல்துறை முகத்தில் ஏற்றுமதி செய்யப்பட இருந்த 25 டன் விஷத் தன்மை மிக்க மஞ்சள் நிற குளோரின் வாயு தொட்டி, தவறுதலாக அங்கிருந்த கப்பல் தளத்தில் விழுந்து வெடித்து சிதறியதில் குறைந்தப்பட்சமாக 13 பேர் உயிரிழந்து இருப்பதுடன் 250 பேர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    
அகபா( Aqaba) துறைமுகத்தில் இருந்து ஜிபூட்டிக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்த 25 டன் எடையுள்ள விஷத் தன்னை மிக்க மஞ்சள் நிற குளோரின் வாயு தொட்டியால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த நாட்டின் அரசு தொலைகாட்சி நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், இயந்தர கைகளின் உதவியுடன் கப்பலுக்குள் குளோரின் தொட்டியை ஏற்றிய போது தொட்டி பிடியை இழந்து கப்பல் தளத்தில் விழுந்து வெடித்து, அதிலிருந்து விசத் தன்மைமிக்க மஞ்சள் நிற வாயு வெளியேறி அங்குள்ள ஊழியர்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடச் செய்வது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து அகபா மக்கள் தயவு செய்து தங்களது வீடுகளின் கதவுகள் மற்றும் சன்னல்களை அடைத்துக் கொண்டு வீடுகளுக்குள்ளேயே இருக்கும் படி கேட்டுகொள்கிறேன், என்னென்றால் இந்த வாயு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படும் என அகபா சுகாதாரத் துறைத் தலைவர் ஜமால் ஒபேதாத் அரசு தொலைகாட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜோர்டானின் சிவில் பாதுகாப்பு சேவை அவர்களது பேஸ்ஃபுக் பக்கத்தில் தெரிவித்துள்ள தகவலில், தனித்துவமான சிறப்பு குழு ஒன்று வாயுகளை கையாளுவதற்காக துறைமுகத்திற்கு அனுப்பட்டு இருப்பதாகவும், அகபா பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு மீட்பு விமானங்கள் சென்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மஞ்சள் நிற குளோரின் வாயு, கிருமிநாசினி மற்றும் நீர் சுத்திகரிப்பு பொருளாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இந்த குளோரின் வாயு நாம் சுவாசிக்கும் போது ஹைட்ரோகுளோரிக் அமிலம் மாற்றமடைந்து நுரையீரலில் உட்புற எரிப்பு மற்றும் பிற்போக்கான நீர் வெளியேற்றங்களால் நுரையீரல் மூழ்குதல்களை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடத்திற்கு வந்த ஜோர்டான் பிரதமர் Bisher al-Khasawneh, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சென்று பார்வையிட்டார்.

அகபா துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தானது ஜோர்டானின் சமிபத்திய வருடங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய விபத்தாகும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!