அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தியில் மஹாநாயக்கர்கள்

இப்போது நாட்டிற்கு கடவுளின் உதவி மட்டுமே உள்ளதென அஸ்கிரி மாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

செய்யாத விடயங்கள் தொடர்பில் உபதேசிப்பதால் பலன் இல்லை என்பதை மகா சங்கரத்தினர் புரிந்து கொண்டதால் தற்போது தாம் பெரும் ஏமாற்றத்திலும் வருத்ததிலும் உள்ளதாக அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகானாஹிமி தெரிவித்துள்ளார்.

இதே முறைமையின் கீழ் நாடு தொடர்ந்து செயற்பட்டால் நாடு பாரிய பாதாளத்திற்கு செல்லும் என மகாசங்கத்தினர் தொடர்ச்சியாக கூறி வந்த போதிலும் ஆட்சியாளர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மகாசங்கத்தினர் வழங்கிய அறிவுரைகள் மற்றும் அறிவுறுத்தல்களை ஆட்சியாளர்கள் புறக்கணித்ததன் காரணமாகவே நாடும் மக்களும் இவ்வாறானதொரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இன்றைய நிலைமையை ஒரு சிறு குழந்தையினால் கூட புரிந்து கொள்ள முடிகிறது. படித்தவர்கள் அனைவரும் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
புத்தரை வணங்கி, நாட்டைக் காப்பாற்றுமாறு கடவுளிடம் வேண்டுவதைத் தவிர, இதற்கு வேறு யாரும் எதுவும் சொல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இந்த நாட்டில் உள்ள பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மிகவும் அஞ்சுவதாகவும், கடவுள் நாட்டைக் காப்பார் என்பதை தவிர அவர்களுக்கு வேறு நம்பிக்கை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!