ஜெனிவாவில் இலங்கைக்கு இழைத்த தவறை திருத்துங்கள்! – பிரித்தானியாவிடம் கோருகிறார் பீரிஸ்

ஜெனீவாவில் 2015 ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மற்றும் முப்படைகளுக்கு அநீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதனைத் திருத்திக் கொள்வதற்கு அதில் தலையிடுமாறு பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

‘நல்லாட்சி அரசாங்கம் யுத்தம் குற்ற விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கை நாட்டையும் பாதுகாப்புத் தரப்பினரையும் காட்டிக்கொடுப்பதாக அமைந்துள்ளது. இது வேறு எந்த நாடுகளிலும் இடம்பெறாத நடைமுறையாக அமைந்துள்ளது.

மேலும் எமது நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதென்பது உறுதியாகி வருகிறது. அவ்விவகாரத்தில் பிரித்தானிய பிரபுக்கள் சபை உறுப்பினர் நேஸ்பி இலங்கைக்கு ஆதரவாக கருத்துகளை முன்வைத்துள்ளார்.

ஆகவேதான் 2015 ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கும், படைப்பிரிவினருக்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதியான தீர்மானத்தை திருத்திக்கொள்வதில் தலையிடுமாறு பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!