உலகை உலுக்கிய ஜோர்ஜ் புளோய்ட் கொலை: குற்றவாளிக்கு மேலும் 21 வருட சிறைத்தண்டனை!

உலகை அதிர வைத்த அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளோய்ட்டை (George Floyd) முழங்காலால் மிதித்துக் கொண்ட வெள்ளையின பொலிஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு (Derek Chauvin) மேலும் 21 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மினசோட்டா மாகாணத்தின் மினேபொலிஸ் நகரில் 2020 மே 25 ஆம் திகதி 46 வயதான ஜோர்ஜ் புளோய்ட் என்பவரை கைது செய்தபின் அவரின் கழுத்தில் சுமார் 9 நிமிடங்கள் தனது முழங்காலை வைத்து டெரக் சாவின் அழுத்தியதில் மூச்சுத் திணறி ஜோர்ஜ் புளோய்ட் (George Floyd) உயிரிழந்தார்.
    
ஜோர்ஜ் புளோய்ட் (George Floyd)கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு வித்திட்டதுடன் அமெரிக்காவின் பல நகரங்களில் வன்முறைகளும் வெடித்தது.

இந்நிலையில் சந்தேகநபரான 46 வயதான டெரக் சாவினுக்கு (Derek Chauvin) இக்கொலை தொடர்பில் ஏற்கெனவே 22 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜோர்ஜ் புளோய்ட்டின் (George Floyd) சிவில் உரிமைகளை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டில் சாவினுக்கு மேலும் 21 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றமொன்று நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

இக்குற்றச்சாட்டு தொடர்பில் தான் குற்றவாளி என ஏற்கெனவே டெரக் சாவின் (Derek Chauvin) ஒப்புக்கொண்டிருந்தார். அதேசமயம் இவ்விரு தண்டனைகளையும் ஏக காலத்தில் டெரக் சாவின் (Derek Chauvin) அனுபவிக்க முடியும்.

ஆனால், இத்தீர்ப்பின் காரணமாக அவர் (Derek Chauvin) சிறையில் கழிக்க வேண்டிய காலம் அதிகரிகும் என கூறப்படுகிறது. ஜோர்ஜ் புளோய்ட் (George Floyd) கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!