நாடாளுமன்ற வளாகத்தில் கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

நாடாளுமன்ற வளாகம் பொல்துவ சந்திப் பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது போராட்டக்காரர்களினால் கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹல்தல்துவ தெரிவித்துள்ளார்.

பொல்துவ சந்திப்பகுதியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களால் எடுத்துச் செல்லப்பட்ட 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வெலிக்கடை பொலிஸாரினால் ஒபேசேகர புர பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது..

பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!