சிறுமி துஸ்பிரயோக வழக்கில் கைதான 17 பேருக்கு நீதிமன்றத்தில் சரமாரித் தாக்குதல்

சென்னை அயனாவரத்தில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 17 பேரையும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞர்கள் தாக்கியுள்ளனர்.

சென்னை அயனாவரத்தில் 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமி, அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஊழியர்கள், காவல் பணிக்கு வரும் காவலாளிகள், என பலரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஏழு மாத காலமாக நீடித்த இந்த கொடுமை சமீபத்தில் தெரியவந்ததும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அயனாவரம் பொலிஸார் மொத்தம் 24 பேரிடம் விசாரணை மேற்கொண்டு அதில் 17 பேரை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

அதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவர்கள் 17 பேரையும் பொலிஸார் அழைத்து வரும் போது, ஆத்திரமடைந்த பல வழக்கறிஞர்கள் அவர்களை கடுமையாக தாக்கினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!