683 ஏக்கர் காணிகள் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்து மீண்டன

யாழ். மாவட்டத்தில் மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தினரின் வசமிருந்த பொதுமக்களின், 683 ஏக்கர் காணிகள் நேற்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 4 கிராம அதிகாரி பிரிவுகளில் அமைந்துள்ள காணிகளே நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்தக் காணிகள், 964 குடும்பங்களுக்குச் சொந்தமானவையாகும்.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மயிலிட்டிப் பகுதியில் நேற்று நடந்த நிகழ்வில், யாழ். மாவட்டச் செயலர் நா.வேதநாயகனிடம் காணிகள் விடுவிப்புக்கான பத்திரங்களைச் சமர்ப்பித்தார்.

அதேவேளை, பொன்னாலை- பருத்தித்துறை வீதி வழியாக பகலில் சுதந்திரமாகப் பொதுமக்கள் பயணம் செய்வதற்கும் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்றுத் தொடக்கம் அனுமதி வழங்கியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!