ஆதார் அட்டைதாரர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டில் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து சுயவிவர குறிப்புகளும் அடங்கி இருக்கும்.அதுமட்டுமல்லாமல் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் விவரங்களும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இந்நிலையில் ஆதார் அட்டைதாரர்கள் 10 வருடங்களுக்கு ஒரு முறை தங்களது கைரேகை மற்றும் கருவிழி ஆகிய பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறைகளை ஆதார் அணையம் உருவாக்கியுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
   
ஆதார் அட்டைதாரர்கள் விரும்பினால் தன்னார்வ அடிப்படையில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம்.இந்நிலையில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யும் வகையில் விதிமுறைகளை மாற்ற ஆதாரானையும் முடிவு செய்துள்ளது.இருந்தாலும் 70 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசனுக்கு இந்த விதிமுறையில் வந்து விளக்கு அளிக்கப்படும். தற்போதைய சூழலில் குழந்தைகளும் ஐந்து வயதை தொட்ட பிறகு பயோமெட்ரிக் விவரங்களை கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!