சம்பந்தனுக்கு அருகதையில்லை! – பசில் சீற்றம்

மகிந்த ராஜ­பக்ச பெற்­றுக்­ கொ­டுத்த மாகாண சபையைப் பாது­காத்­துக் கொள்­ளத் தெரி­யாத எதிர்க்­கட்­சித் தலை­வர் சம்­பந்­தன் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பிளவு குறித்­துப் பேசு­வ­தற்கு அரு­க­தை­யற்­ற­வர். என்று முன்­னாள் அமைச்­ச­ரும் ராஜ­பக்­ச­வின் சகோ­த­ர­ரு­மான பசில் ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி அழி­வ­டை­கின்­றது என்று கவ­லைப்­ப­டும் சம்­பந்­தன் கூட்­டாட்­சிக் கட்சி அழித்­ததை மறந்­து­விட்­டாரா? சுதந்­தி­ரக் கட்­சி­யின் தேவையை அன்று உணர்ந்த பண்­டா­ர­நா­யக்க ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து சுதந்­தி­ரக் கட்­சியை உரு­வாக்­கி­னார். சுதந்­தி­ரக் கட்சி தனது பொறுப்பை உரிய முறை­யில் நிறை­வேற்­றா­தன் கார­ண­மாக நாங்­கள் சிறி­லங்கா பொது மக்­கள் முன்­ன­ணியை உரு­வாக்கி அந்த நோக்­கத்தை அடைந்து வரு­கின்­றோம்.

வடக்கு, கிழக்கு மக்­கள் பல்­வேறு சிக்­கல்­களை எதிர்­கொண்­டுள்­ள­னர். எமது கட்­சி­யா­னது வடக்கு, கிழக்கு மக்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பி­லும் ஆராய்ந்து செயற்­பட்டு வரு­கின்­றது. நல்­லாட்சி அர­சு­டன் இணைந்து செயற்­ப­டும் சம்­பந்­தன் வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்கு எத­னைப் பெற்­றுக் கொடுத்­தார் என்று கேட்­கின்­றோம். சம்­பந்­தன் போன்ற தலை­வர்­களை நம்­பிய வடக்கு கிழக்கு மக்­கள் இன்று ஏமாற்­றப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

எமது காலத்­தில் வடக்கு, கிழக்கு பகு­தி­க­ளுக்கு எவ்­வ­ளவு சேவை செய்­துள்­ளோம் என்று அனை­வ­ருக்­கும் தெரி­யும். ஆனால் இன்று அவ்­வா­றான அபி­வி­ருத்­தி­கள் வடக்­கில் இடம்­பெ­று­கின்­ற­னவா? மாறாக வடக்கு மக்­க­ளின் பிரச்­சினை எது­வும் தீர்க்­கப்­ப­டா­மல் உள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­மைப்­பின் மீதான அதி­ருப்தி கடந்த தேர்­த­லில் வெளிக்­காட்­டப்­பட்­டது.

உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­தலை அரசு பிற்­போட்டு வந்­தது. நாம் போராடி அந்­தத் தேர்­த­லைப் பெற்­றோம். இப்­போது மாகாண சபைத் தேர்­த­லை­யும் பிற்­போட்டு வரு­கின்­ற­னர். அதற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு துணை­போ­கின்­றது. தேர்­தலை பிற்­போ­டும் அர­சின் முயற்­சிக்கு சம்­பந்­தன் ஆத­ரவு வழங்கி வரு­கின்­றார்.

வடக்கு, கிழக்கு மற்­றும் மாகாண சபை­களை மகிந்த ராஜ­பக்­சவே மீண்­டும் நிறு­வி­னார். ஆனால் இன்று கிழக்கு மாகா­ண­சபை கலைக்­கப்­பட்டு தேர்­தல் நடத்­தப்­ப­டா­மல் உள்­ளது. அதே­போன்று வடக்கு மாகா­ண­ச­பை­யும் சில தினங்­க­ளில் கலைக்­கப்­ப­டும் சாத்­தி­யம் ஏற்­பட்­டுள்­ளது. நாம் பெரிய நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யில் பெற்­றுக்­கொ­டுத்த மாகாண சபை­களை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இன்று இழந்து வரு­கின்­றது என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!