22 திருத்தம் நிறைவேறினால்தான் இலங்கைக்கு விடிவு! நீதி அமைச்சர் தெரிவிப்பு

எதிர்காலத்தில் சர்வதேசம் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியுள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் அவர் உரையாற்றுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

“சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றமை தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்றன.
எனினும், தற்போதைய நிலையில், சர்வதேச நாணய நிதியத்தைத் தவிர இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேறு வழியில்லை.

எமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி, ஏனைய நாடுகளின் ஆதரவு மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை போன்றவை இலங்கைக்குத் தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமாக இருந்தால் அது 22 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியுள்ளது”என்றார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!