பிரதமர் மோடியின் ஜி20 மாநாட்டு உரைக்கு கட்சிகள் கடும் எதிர்ப்பு!

பிரதமர் மோடி ஜி20 மாநாட்டில் பேசுகையில், ‘பொதுமக்களுக்கு இணைய வசதி எளிதாக கிடைப்பதை இந்தியா உறுதி செய்துள்ளது. ஆனால், சர்வதேச அளவில் இணைய வசதியில் இன்னும் பாகுபாடு காணப்படுகிறது’என்று கூறினார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    
அக்கட்சியின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- இணையத்தால் இணைக்கப்பட்ட இந்தியாவை உருவாக்குவதற்கு பதிலாக, மற்ற நாடுகளை விட அடிக்கடி இணையதளங்கள் முடங்கும் நாடாக இந்தியாவை பா.ஜனதா அரசு மாற்றி விட்டது. இணையதள பாகுபாடு நீடிக்கிறது. இணையதள ஏகபோக அதிகாரம், கருத்து சுதந்திரத்தை தகர்த்து விடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் ெயச்சூரி கூறியிருப்பதாவது:- 2015-ம் ஆண்டில் இருந்து இணையதளம் முடங்குவதில் உலகத்தின் தலைநகராக இந்தியா திகழ்ந்து வருகிறது. பாதிக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு இணைய வசதி கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!