முதலமைச்சரின் உரையை உன்னிப்பாக கவனியுங்கள்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களைத் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் தலைவராக ஏற்றுள்ளனர் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.

இதை நாம் கூறும்போது வடக்கின் முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஆதரவாக வலம்புரி செயற்படுகிறது என்று சிலர் முணுமுணுப்பதும் வலம்புரி நடுநிலை தவறிவிட்டது எனக் கூறுவதும் நம் செவி களில் கேட்கவே செய்கிறது.
வலம்புரியைப் பொறுத்தவரை அது எப் போதும் தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவே குரல் கொடுக்கும். தமிழ் மக்களுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அவர்களை வழிப்படுத் தவும் வலம்புரி என்றும் பின்னிற்காது.

மகாபாரதப் போரில் பாண்டவர் பக்கம் கிருஷ்ண பரமாத்மா நிற்பது மட்டுமன்றி அருச் சுனனுக்கு தேர்ச்சாரதியாகவும் இருந்தார் எனும்போது கிருஷ்ண பரமாத்மா நடுநிலை தவறிவிட்டார் எனக் கூறலாமா என்ன?

தர்மம் வெல்வதற்கு உதவுவதுதான் நடு நிலை. எனவே எங்கு நீதி உள்ளதோ! எங்கு உண்மை உள்ளதோ! அதற்கு ஆதரவாக நிற் பதுதான் தர்மம். அதைத்தான் வலம்புரி செய்து வருகிறது.

வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ் வரன் தமிழ் மக்களின் நிலைப்பாட்டைத் தெட்டத்தெளிவாகக் கூறிவருகிறார்.

அவர் கூறுவது அத்தனையும் உண்மை. தமிழ் மக்களின் மனங்களைப் பிரதிபலிப் பவை.
அதுமட்டுமன்றி உண்மையை அவர் எங்கு சொல்லவும் தயங்கவில்லை. அதாவது இந்த நாட்டின் ஜனாதிபதியாயினும் சரி. பிரதமரா யினும் சரி. இந்தியப் பிரதமராயினும் பிரிட்டிஷ் அமைச்சராயினும் அனைவர் முன்பாகவும் அவர் சொல்வது தமிழ் மக்களின் பிரச்சினை களை – உண்மைகளை – யதார்த்தத்தை.

அதேவேளை தங்கள் நில மீட்புக்காக போராடுபவர்களிடமும் எது சரி; எது பிழை; எதை நாம் செய்ய வேண்டும்; எப்போது செய்ய வேண்டும்; எதுவரை எங்கள் உரிமைப் போராட் டம் நீடிக்க வேண்டும் என்பதையயல்லாம் மிகத் தெளிவாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிவருகின்றார்.

முதலமைச்சர் போல; யாருக்கும் பயப்படாமல், தெட்டத்தெளிவாக தமிழ் மக்களின் பிரச்சி னையை யார் எடுத்துரைத்தாலும் அவர்களை வலம்புரி என்றும் போற்றும்.
ஏனெனில் இன்றிருக்கக்கூடிய சூழ்நிலை யில் நாங்கள் இழந்து போயுள்ளோம் என்பதற் கப்பால் இழந்த எங்களை பேரினவாதம் கடுமை யாக ஏமாற்றியும் வருகிறது.

இந்த ஏமாற்று மோசடியில் இருந்து எங்க ளைப் பாதுகாக்க வேண்டுமாயின் எங்கள் பிரச்சினையை – எங்களுக்கு இழைக்கப்பட்ட – இழைக்கப்படுகின்ற அநீதிகளை எவர் முன் னிலையிலும் நிமிர்ந்து நின்று சொல்ல வேண் டும். அவ்வாறு சொல்லும் போது அந்த உண்மை எங்களுக்கு என்றோ ஒரு நாள் உரிமையைப் பெற்றுத்தரும்.
ஆகையால் அன்புக்குரிய தமிழ் மக்களே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் களின் உரைகளை கேளுங்கள். வாசியுங்கள். தவறவிடாதீர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!