இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்த கோட்டா இப்போது அவதிப்படுகிறார்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை மக்களின் நலனுக்காக தனது இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்தமையினாலேயே அவர் தற்போது நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
    
கொழும்பிலுள்ள தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட பசில் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மக்களுக்காக தியாகம் செய்ததாகவும், அதன் விளைவாக துன்பங்களை அனுபவித்ததாகவும் கூறினார். குறித்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போன்ற தியாகத்தை நீங்களும் செய்வீர்களா? என பசில் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், தேவை ஏற்பட்டால் தனது இரட்டைக் குடியுரிமையை கைவிட தயாராகவுள்ளதாகவும் எனினும், தற்போது அதற்கான தேவை இல்லை என்றும் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ச மக்களின் எதிர்ப்பு போராட்டங்களுக்கு அச்சமடையாது பொறுமை காத்திருந்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்த்திருக்க முடியும் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!