பிரித்தானிய மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கட்டாயம் வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பிரித்தானிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி, உடல்நிலை சரியில்லாத பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் சிறார் காப்பகங்களுக்கும் அனுப்ப வேண்டாம் எனவும் பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
    
மேலும், வெளியே செல்லும் போது மாஸ்க் கட்டாயம் எனவும் பிரித்தானியாவின் UKHSA அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. 38C அல்லது அதற்கும் மேல் காய்ச்சல் இருந்தால் சிறார்கள் பாடசாலைக்கு செல்வதை தவிருங்கள் எனவும், உடல்நிலை தேறும் வரையில் ஓய்வெடுக்கவும் கேட்டுகொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது கொரோனா, குளிர் காய்ச்சல் மற்றும் ஸ்கார்லெட் காய்ச்சல் உள்ளிட்டவை அதிகம் பரவாமல் இருக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒருபகுதி என்றே கூறுகின்றனர்.

எதிர்வரும் வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறிவரும் நிலையில், பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிவிட்டு, மில்லியன் கணக்கான ஊழியர்கள், மாணவர்கள் அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு இந்த வாரம் திரும்ப உள்ளனர்.

தீவிர கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம் அத்துடன், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும், பாடசாலைகள், சிறார் காப்பகங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம் என UKHSA அமைப்பின் முதன்மை சுகாதார ஆலோசகர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறார்களின் கைகளை சுத்தமாக வைத்திருக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அவர்களுக்கு அது தொடர்பில் கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் சூசன் ஹாப்கின்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ஸ்கார்லெட் காய்ச்சலுக்கு இதுவரை 34,000 சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2017 மற்றும் 2018 காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 7 மடங்கு அதிகம் எனவும் UKHSA அமைப்பின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியாவில் மட்டும் iGAS எனப்படும் Strep A பாதிப்புக்கு இதுவரை 30 சிறார்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!