தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை – 49வது நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்றையதினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னாள் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
    
முன்னதாக உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதூபிகளுக்கு முன் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் நினைவேந்தல் நிகழ்வில்நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், மறவன்புலவு சச்சிதானந்தன் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் காலை பத்து மணியளவில் மற்றுமொரு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பாக ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!