உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் பேரதிர்ச்சியில் கணவன்மார்கள்!

திருமணம் ஆன பிறகு மனைவியின் சம்மதம் இன்றி கணவன்மார்கள் உடலுறவு ஈடுபடுவது பாலியல் வல்லுறவு என்பதை குற்றமாக அறிவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டு தற்பொழுது வரை இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அது திருமண பாலியல் வல்லுறவு என அறிவிப்பது ரீதியாக மத்திய அரசு வரும் 15ஆம் தேதிக்குள் தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
    
இதற்கு முன்னதாகவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் , மனு அளித்தவர்களில் ஒருவர் மீண்டும் மேல்முறையீடு வழக்கு தொடுத்து இருந்தார். அதுமட்டுமின்றி இந்த இரு நீதிபதிகளில் ஒருவர், இந்திய தண்டனைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்பொழுது வரை பல தீர்ப்புகள் வழங்கி வரும் நிலையில் இந்த வழக்கிற்கு மட்டும் நீதி கிடைக்காமல் உள்ளது என்றவாறு கூறி இருந்தார்.

ஆனால் இது போன்ற ஒரு வழக்கானது கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்றது. மனைவிக்கு விருப்பமின்றி கணவன் பாலியல் உறவில் ஈடுபட்டதால் அவருக்கு அரசியலமைப்பு பிரிவு 14 என்ற தீர்ப்பை வழங்கியது. அதாவது இந்த பிரிவு உணர்த்துவது என்னவென்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது தான். ஆனால் பாதிக்கப்பட்ட கணவர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு தொடுத்து இருந்தார். இதுபோல பல வழக்குகளும் இத்தோடு சேர்த்து விசாரணை செய்யப்பட்டது.

அவ்வாறு விசாரணை செய்ததில் ஐ பி சி 375 பிரிவின்படி மனைவி மைனராக இல்லாத பொழுது கணவர் தனது மனைவியுடன் பாலியல் உறவு கொள்வது வன்புணர்வு ஆகாது என்று உத்தரவிட்டுள்ளது. தற்பொழுது மத்திய அரசு பதிலளிக்க கூறி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை அடுத்து இந்த வழக்கு விசாரணையானது மார்ச் 21ஆம் தேதி இறுதியில் தொடங்கும் என கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!