சமையல் எண்ணெய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! January 19, 2023 9:43 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துணி நகர ராமகிருஷ்ணா காலனியில் சிலர் விலங்குகளின் கொழுப்பு எலும்பு ஆகியவற்றிலிருந்து எண்ணெய் புழிந்து அவற்றை சமையல் எண்ணெயுடன் கலந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோருடன் சென்ற போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் ஏராளமான அளவில் பசுவின் தோள்கள், வெட்டப்பட்ட பசுவின் உடல், வெட்டுவதற்காக கட்டப்பட்ட பசுக்கள், பசுவின் கொழுப்பில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், கலப்படம் செய்யப்பட்ட எண்ணெயுடன் கூடிய டிண்டல் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். போலீசார் உடன் சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கிருந்த கலப்பட எண்ணெய், விலங்குகளின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விலங்குகளின் உடல் பாகங்களில் இருந்து பிழியப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்தி கலப்படம் செய்யப்பட்ட எண்ணெயை சிறிய உணவகங்கள் மற்றும் உள்ளூரில் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு சப்ளை செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கலப்பட எண்ணை கும்பலில் மேலும் பலர் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…