அவுஸ்திரேலிய மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பேஸ்மேக்கர் பயன்படுத்துபவர்கள் மின்சார அடுப்பை (இன்டக்சன் குக்கர்களை) பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்ற வேண்டுகோள் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மின்சார அடுப்புகள் மிகவும் பிரபலமானவையாக மாறிவருகின்றன,ஆனால் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் இவற்றை பயன்படுத்தக்கூடாது என்ற வேண்டுகோள் வெளியாகியுள்ளது.
    
பேஸ்மேக்கர்கள் பொருத்தப்பட்டவர்கள் மின்சார அடுப்பை தவிர்க்கவேண்டும் என்ற வேண்டுகோளே வெளியாகியுள்ளது. மின்சார அடுப்பில் உள்ள காந்தப்புலங்கள் பேஸ்மேக்கரின் செயற்பாடுகளில் தலையிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ள செலியா வட் மின்சார அடுப்பை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

நான் எட்டு வருடத்திற்கு முன்னர் பேஸ்மேக்கர் பொருத்தினேன் மின்சார அடுப்பின் அருகில் செல்லவேண்டாம் என்பது எனக்கான முக்கிய அறிவுரை என அவர் ஏபிசிக்கு தெரிவித்துள்ளார்.
72 வயதான அவர் தான் தனது புதிய வீட்டை கட்டும்போதும் இந்த பிரச்சினையை எதிர்கொண்டதாகதெரிவித்துள்ளார், நான் மின்சார அடுப்பை பயன்படுத்த விரும்பினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

உணவை தயாரிப்பதற்கான வெப்பத்தை உருவாக்குவதற்கு பதில் மின்சார அடுப்புகள் காந்தப்புலத்தை உருவாக்குகின்றன இதன் மூலம் எடிகரண்ட் உருவாகின்றது . இந்த வகையான எடி கரண்ட் பேஸ்மேக்கர் போன்ற மருத்துவ உபகரணங்கள் இயங்குவதை தடுக்கலாம் என மருத்துவர் வோர்விக் பிசப் ஏபிசிக்கு தெரிவித்துள்ளார்.

பேஸ்மேக்கரை ஸ்டவ்விலிருந்து இரண்டு அல்லது 3 அடி தொலைவில் வைத்திருக்கவேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அது உங்களின் இடது தோளில் காணப்பட்டால் நீங்கள் உங்கள் வலதுதோள் இன்டக்சன் குக்கரை பார்க்கும் விதத்தில் நிற்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!