அனல்மின் நிலையங்களுக்கு மத்திய அரசு விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

அனல்மின் நிலையங்கள் தங்களது முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. டாடா பவர், அதானி மின்நிலையங்கள், எஸ்ஸார் மின்உற்பத்தி நிலையம், ஜே.எஸ்.டபிள்யூ ரத்னகிரி, மீனாட்சி எனர்ஜி உள்பட 15 அனல்மின் நிலையங்களுக்கு இதுதொடர்பான நோட்டீசை பிறப்பித்துள்ளது.
    
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- நாட்டின் கோடைகால மின்தேவை அதிகரித்து வருகிறது. ஆகவே, மார்ச் 16-ந் தேதியில் இருந்து ஜூன் 15-ந் தேதிவரை, தங்களது அனல்மின் நிலையங்கள், இறக்குமதி நிலக்கரியை பயன்படுத்தி, தங்களது முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். இதன்மூலம் கோடைகால மின்தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!