கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை

தி.மு.க தலைவர் கருணாநிதி திடீர் சுகயீனம் காரணமாக, வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

உடல்நலக் குறைவு காரணமாக கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீட்டிலேயே வைத்திய வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. எனவே, அவரை பார்க்க யாரும் வரவேண்டாம் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கருணாநிதி தங்கியிருக்கும் கோபாலபுரம் வீட்டிற்கு முன்பாக பொது மக்கள் ஒன்று கூடியுள்ள நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக அவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கும் காவேரி வைத்தியசாலை அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது 24 மணி நேரமும் அவர் வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், நோய்க்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு, யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தி.மு.க வின் செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கமல் ஹாசன் உள்ளிட்டவர்கள் கருணாநிதியை நேரில் சந்தித்து நலன் விசாரித்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!