இரகசிய தோழிக்கு அதிபர் புடின் வழங்கிய மாளிகை!

ரஷ்ய அதிபர் புடின் தனது நீண்ட காலத் தோழியான அலினா கபாவே என்ற பெண்ணுக்கு, ரஷ்யாவின் மிகப்பெரும் நவீன மாளிகையை கட்டி அன்பளித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடினுக்கு தற்போது 70 வயதாகிறது. இவரது 20 ஆண்டுகால தோழியாக அறியப்படுவபர் அலினா கபாவே. இவருக்கு தற்போதைய வயது 39. ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக ரஷ்யாவை திரும்பி பார்க்க வைத்த அலினாவை, புடினும் திரும்பிப் பார்த்தில், அதிபருக்கு மிகவும் நெருக்கமாக மாறிப்போனார் அலினா.
   
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்கும் அலினா, அதன் பின்னர் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராகவும் சிலகாலம் இருந்தார். புடினின் அன்பு கிடைத்ததும், ரஷ்யாவின் அறிவிக்கப்படாத ராணியாகவே வலம் வந்தார்.

தற்போது தோழிக்காக புடின் கட்டி முடித்து பரிசாக அளித்திருக்கும் மாட மாளிகையே ரஷ்யாவுக்கு அப்பாலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது போர்த் தாக்குதலை தொடங்கியதும் புடினுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் பரிசீலித்தன.

ஐரோப்பிய நாடுகளோ அலினா மீதான பொருளாதாரத் தடை குறித்து யோசித்தது. அந்தளவுக்கு புடினின் பெரும் சொத்துக்கள் அலினா வசமே புதைந்து கிடக்கின்றன. அதிலும் 20 அறைகள், சினிமாக்கூடம், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாளிகையை கட்டி முடித்து அலினாவுக்கு புடின் பரிசளித்திருக்கிறார்.

இதற்காக இங்கிலாந்து பவுண்ட் மதிப்பில் 1 கோடிக்கான ரஷ்ய அரசு நிதியை முறைகேடாக புடின் திருப்பிவிட்டிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. ஏரி ஒன்றின் கரையில் முழுக்கவும் மரங்களை இழைத்து உருவாக்கப்பட்ட இந்த மாளிகை குறித்த செயற்கைக்கோள் படங்களும், அதற்கு ஆனதாக சொல்லப்படும் செலவினங்களும், உக்ரைன் போருக்கு நிகராக உலகளவில் பேசு பொருளாகி இருக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!