டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேறி வருகிறது: பிரதமர் மோடி!

பிரதமர் மோடி, பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் உரையாற்றி வருகிறார். நேற்று 10-வது அமர்வில் ‘வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நிதி சேவைகளின் செயல் திறனை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தொழில் நுட்ப புரட்சியில் இந்திய தற்போது உலகிற்கே வழிகாட்டியாக உள்ளது, சரக்கு மற்றும் சேவை வரி மூலம் பெரிய அலவில் வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    
இந்தியா, நிதி ஒழுக்கம்- வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை நோக்கி நகர்கிறது. இன்று உலக பொருளதாரத்தின் பிரகாசமான புள்ளியாக இந்தியா அழைக்கப்படுகிறது. 2021-22-ம் ஆண்டில் இந்தியா அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை பெற்றது. ரூ பே, யுபிஐ ஆகியவை குறைந்த விலை மட்டுமின்றி மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பமாக உள்ளது.

இது உலகில் நமது அடையாளமாக உள்ளது. டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேறி வருகிறது. சுதந்திரத்தின் 75-வது ஆண்டில், இந்தியா யு.பி.ஐ. வழியாக ரூ.75 ஆயிரம் கோடியை பணபரிவர்த்தனை செய்துள்ளது. இது உலகில் இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய அடையாளம். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கையான வலுவான நிதி அமைப்பு இந்தியாவிடம் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!