கிராமங்களில் பரவலாகி வரும் டிஜிட்டல் போதை!

களைப்பு, தூக்கமின்மை, தலைவலி, கண் சிவத்தல் எனப் போராடுவது நகரவாசிகள் மட்டுமல்ல, எரிச்சல், குடும்பத்துடன் சண்டை சச்சரவுகள். என இப்போதெல்லாம் ஒப்பீட்டளவில் நகரத்தைக் காட்டிலும் அமைதியான சூழலில் வாழக்கூடிய கிராமவாசிகளும் கூட டிஜிட்டல் போதையின் சிக்கலை எதிர்கொள்கிறார்கள் என்று சமீபத்தில் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
    
அதனடிப்படையில் கிராமப்புற மக்கள் மொபைல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு சமீப காலங்களில் மிக அதிகமாக அடிமையாகி வருவதாக மருத்துவர்கள் கூறுவது அதிகரித்திருக்கிறது, மேலும் இப்பிரச்சனைகளில் இருந்து விடுபட நகர்ப்புற மக்களைப் போலவே அவர்களுக்கும் ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. தொழில்நுட்ப அடிமைத்தனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தேவைப்படும்போது மருத்துவ தலையீடு செய்வதும் அவசியம் என்றார்கள் மருத்துவர்கள்.

மானசா குரூப் ஆப் ஹாஸ்பிடல்ஸ், சிக்கபல்லாபூர் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஹெச்.எஸ். ஷஷிதர் கூறுகையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்புகளில் தொழில்நுட்ப கேஜெட்டுகளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையில் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. கிராமங்களில் உள்ள டீக்கடைகளுக்கு அருகில் அமர்ந்து, கைப்பேசியில் விளையாடுவது அல்லது இணையத்தில் மேய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் தற்போது மிகவும் அதிகரித்திருக்கின்றனர்.

முன்பெல்லாம் கிராமம் என்றால் மக்கள் பிஸிக்கலாகப் பல வேலை செய்வார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம் ஆனால், இப்பொதெல்லாம் அப்படியான காட்சிகளைக் காண்பது அரிது. பிற பிஸிக்கல் செயல்பாடுகளை மேற்கொள்பவர்களைக் காட்டிலும் மிகவும் பொதுவான காட்சியாக இப்போது அரங்கேறிக் கொண்டிருப்பது டீக்கடைகளிலும், கிராம பஞ்சாயத்து திண்ணைகளிலும் அமர்ந்து கொண்டிருந்தாலும் உட்கார்ந்த இடத்திலேயே மொபைல் போன்களில் தொலைந்து போவது தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறதூ.

மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்கும்போது, தங்கள் குழந்தை திரையில் எதையாவது பார்க்காமல் சாப்பிட மறுக்கிறது என்பது பெற்றோரின் பொதுவான புகார். குழந்தை பிடிவாதமாக இருப்பதாகவும், கையில் ஃபோனைக் கொடுத்தாலொழிய அவர்களுக்குக் கீழ்ப்படிவதில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் டாக்டர் ஷஷிதரால் தொடங்கப்பட்ட டிஜிட்டல் டிடாக்ஸ் மையங்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு இலவச ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட முதல்-வகையான கிராமப்புற மையங்கள் ஆகும்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் சயின்சஸின் (நிம்ஹான்ஸ் (Nimhans)) பிஎச்டி அறிஞரான பிரஞ்சலி சக்ரவர்த்தி தாக்கூர், தொற்றுநோய்க்குப் பிந்தைய, தொழில்நுட்ப அடிமைத்தனம் ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது என்று கூறினார். 2014 ஆம் ஆண்டு ‘தொழில்நுட்பத்தின் ஆரோக்கியமான பயன்பாட்டிற்கான சேவை (SHUT) கிளினிக்குகளை’ இவர்கள் தொடங்கினர், மேலும் சமீபத்தில் மக்கள் தங்கள் அன்றாட வழக்கத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை சமநிலைப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க ஒரு டிடாக்ஸ் ஹெல்ப்லைனைத் தொடங்கினர். பல பெற்றோர்கள் ஹெல்ப்லைனை அழைக்கிறார்கள்,

தங்கள் குழந்தைகள் ஏன் தொழில்நுட்ப கேஜெட்டுகளுக்கு அடிமையாகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு உதவ பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவும் உதவி கேட்கிறார்கள் என்று பிரஞ்சலி தாக்கூர் கூறினார். கர்நாடகாவின் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக, தேவனஹள்ளி, யெலஹங்கா, தொட்டபல்லாபூர் மற்றும் பிற மாவட்டங்களில் மேலும் பத்து மையங்களைத் திறக்க டாக்டர் ஷஷிதர் திட்டமிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!