இளையராஜாவின் பதவி குறித்து பேசிய சீமான்!

இளையராஜாவிற்கு சிறந்த இசையமைப்பாளர் என்று கருதி எம்பி பதவி வழங்கவில்லை, தலித் என்ற காரணத்தை முன் வைத்து தான் வழங்கி இருக்கிறார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மு.களஞ்சியம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘முந்திரிக்காடு’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவிற்கு சென்று பார்த்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த படம் பார்க்கிற அனைவருக்கும் முதலில் சாதி சிந்தனை வரும். இந்த படம் பார்த்த பிறகு பலருக்கும் சாதி என்றால் என்ன என்பது பற்றிய மன உளவியல் நோய் தீரும்.
    
பரியேறும் பெருமாள் படத்திற்கு முன்னதாகவே எடுக்கப்பட்ட படம் இது. பொருளாதார நிதி நெருக்கடியால் தற்போது தாமதமாக வருகிற 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சாதியை கலப்பு திருமணம் முடித்துவிடுமா என்றால் அதுவும் ஒரு தீர்வு தான். அனைவரும் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள். நாங்கள் மாடு உழவுக்கு பயன்படுத்துவதால் உண்ண மாட்டோம் என்று சொல்வார்கள்.

எல்லா மாநிலங்களிலும் மாட்டுக்கறி சமைத்து சாப்பிடுகிறார்கள். இந்த காலத்திற்கு ஏற்ப உடல் வலிமைகாக நானும் மாட்டு கறி உண்ணுகிரேன். தாழ்த்தப்பட்டவர்கள் தான் மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் என்று குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், தொடர்ந்து நான் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. என்னை அழைத்து நடிக்க வைத்தால் எதற்கு பிரச்சினை என்று பலர் நினைக்கின்றனர். உலகத்தில் எந்த நாட்டிற்கு சென்றாலும் நீ யார் என்று கேட்டால் பெயர் சொல்ல வேண்டும். உலகத்திற்கு எங்கு சென்றாலும் அடையாளம் தமிழன் என்பது தான். யாரும் செட்டியார், நாடார், வன்னியர், முதலியார் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள முடியாது. சாதி என்று பிரிந்து கிடப்பவர்களை சேர்ப்பதற்கு தமிழன் என்பது தான் அடையாளம் என்று கூறிய அவர் இளையராஜாவிற்கு எம்.பி பதவி வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கும் பதிலளித்து பேசினார்.

அப்போது இளையராஜாவிற்கு சிறந்த இசையமைப்பாளர் என்று கருதி எம்பி பதவி வழங்கவில்லை. தலித் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும்தான் வழங்கி இருக்கிறார்கள். சென்னையில் ஜாதி இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் இங்குதான் ஜாதியை வைத்து இன்னும் பல தெருக்கள் இருக்கிறது. அதை நான் முதல்வராக வந்தால் ஒழிப்பேன் என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!