66 வீத இந்தியர்களுக்கு இதயநோய் ஏற்பட வாய்ப்பு!

சமீப காலமாக உலகிலுள்ள பல்வேறு பகுதிகளில் இதய நோய் அபாயங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ளவர்களில் 66 வீதமானவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது இந்தியர்களுக்கு இயற்கையிலேயே இரத்தத்தில் காம்பவுண்ட் அளவு அதிகமாக இருப்பதால் இதய நோய் அபாயங்களும் அதிகளவில் காணப்படுகிறது. மெத்தியோனைன் மற்றும் சிஸ்டைனின் வளர்சிதை மாற்றத்தில் இடைநிலையாக உடலில் ஏற்படும் ஒரு அமினோ அமிலம்.

அதிக அளவு ஹோமோசைஸ்டீன் உங்கள் தமனிகளின(Arteries) உட்புறத்தை சேதப்படுத்தும்.
அத்தோடு இரத்தக் கட்டிகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். இது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற இதய நோய்கள் மற்றும் இரத்த நாளக் கோளாறுகளுக்கான உங்கள் ஆபத்தை அதிகரிக்கலாம். அறிக்கையொன்றின் படி இந்தியர்களில் 66 சதவீதமானோருக்கு இதய நோய்களுக்கான அபாயம் அதிகமாக இருப்பதாக வெளியாகியுள்ளது. உயர் புரத உணவுகள், குறிப்பாக சிவப்பு இறைச்சி மற்றும் பால் பொருட்களில், ஹோமோசைஸ்டீனின் அளவு அதிகமாக இருக்கிறது.

சராசரியாக, ஒரு மனிதனுக்கு ஒரு லிட்டருக்கு 5 முதல் 15 மைக்ரோமோல்ஸ் ஹோமோசியஸ்டைன் இருக்க வேண்டும். 50ஐ விட அதிகரித்தால், அது இதயத்தின் ஆர்ட்டரி லைனிங்கை பாதிக்கலாம். இதனால், ஹோமோசியஸ்டைன் இதய நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இது இந்தியருக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!