தொண்டர்களுக்கு ஸ்டாலின் விடுத்த உருக்கமான வேண்டுகோள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருவதன் காரணமாக தொண்டர்கள் அமைதி காத்து பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி கலைந்து செல்ல வேண்டும் என தி.மு.க. உப தலைவர் மு.க. ஸ்டோலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.முக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்காலிகமாக நலிவுற்றுள்ளது. இதன் பின்னர் மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலை சீராகி வருகின்றது.

இந் நிலையில் காவேரி மருத்துவமனையின் முன்னால் தி.மு.க.தொண்டர்கள் ஏராளமானோர் குழுமி இருக்கின்றார்கள். இவர்களை பொலிஸார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் அவர்கள் அந்த அறிவுறுத்தலை நிராகரித்துள்ளனர்.

எனவே இது குறித்து தி.மு.கழகத்தின் உப தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை அறிக்கையின் மூலம் விடுத்துள்ளார். அவ் அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நம் அனைவரின் அன்புக்குரிய கழகத் தலைவர் கலைஞரின் உடல்நிலை பற்றி காவேரி வைத்தியசாலையின் அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு வைத்தியர்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவரன் உடல்நிலை சீராகி வருகிறது. மருத்துவர்கள் குழு தொடர்ந்தும் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

ஆகவே கழகத் தொண்டர்கள் அனைவரும் எவ்வித அசம்பாதவிதங்களுக்கும் இடம் கொடுத்துவிடாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!