“2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ. 2000 நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதால், இந்தியாவில் இனி அவை புழக்கத்தில் இருக்காது. எனவே, மே 23 முதல் செப்டம்பர் 30-ஆம் திகதிக்குள் மக்கள் அவற்றை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
    
மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக வழங்குவதை நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஒரே இரவில் ரத்து செய்த பிறகு, நவம்பர் 2016-ல் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை அச்சிடத் தொடங்கியது.

மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியதாகவும், எனவே, 2018-19 ஆம் ஆண்டில் அவற்றை அச்சிடுவது நிறுத்தப்பட்டது என்றும் ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மே 23, 2023 முதல் எந்த வங்கியிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30 வரை ஒரே நேரத்தில் ரூ. 20,000 வரை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தேவைப்பட்டால், ரிசர்வ் வங்கி செப்டம்பர் 30 முதல் காலக்கெடுவை நீட்டிக்கலாம், ஆனால் தற்போதைய காலக்கெடுவிற்குப் பிறகு யாராவது 2,000 ரூபாய் நோட்டை வைத்திருந்தாலும், அது செல்லுபடியாகும் டெண்டராக இருக்கும் என கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!