27 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகி போட்டியை நடத்தும் இந்தியா!

27 ஆண்டுகளுக்கு பிறகு 2023 உலக அழகி போட்டியை இந்தியா நடத்த உள்ளது. 71-வது உலக அழகி போட்டியை இந்தியா நடத்துகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இந்த ஆண்டே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இருப்பினும், இறுதிப் போட்டி நவம்பர்/டிசம்பர் 2023 இல் தற்காலிகமாகத் திட்டமிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் இந்தியாவில் கூடுவார்கள். இந்தியா கடைசியாக 1996-ஆம் ஆண்டு உலக அழகி போட்டியை நடத்தியது. அந்த ஆண்டு ரீட்டா ஃபரியா மூலம் உலக அழகி பட்டத்தையும் இந்தியா வென்றது.

இந்தியா ஆறு முறை உலக அழகி பட்டத்தை வென்றுள்ளது. ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர். ஒரு மாத காலம் நடைபெறும் இப்போட்டியில் 130 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்பர். போட்டியாளர்களின் சிறப்பைக் கண்டறிய பல போட்டிகள் இருக்கும்.

தற்போதைய உலக அழகி போலந்து நாட்டைச் சேர்ந்த கராலினா பிலாவ்ஸ்கா (Karolina Bielawska) தற்போது உலக அழகி போட்டியை விளம்பரப்படுத்த இந்தியா வந்துள்ளார். 71வது உலக அழகி இறுதிப்போட்டியை இந்தியா நடத்துவதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கராலீனா கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!