கோவையின் முதல் பெண் ஓட்டுநர் பணி நீக்கம்!

கோயம்புத்தூரின் முதல் பெண் ஓட்டுநரான ஷர்மிளா திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஷர்மிளா, முதல் பெண் ஓட்டுநரான இவருக்கு அரசியல் தலைவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
    
வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று மாதங்களாக ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளா திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன் முடிவில் பணியிடை நீக்கம் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக எம்பி கனிமொழி, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஷர்மிளாவின் பேருந்தில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!