தற்போதுள்ள சிறந்த தலைவர் ரணில் தான்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறங்கியே தீருவார். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என அமைச்சர் காஞ்சன விஜேயசேகர தெரிவித்தார்.
    
“ரணில் மொட்டுக் கட்சி சார்பாகவா அல்லது பொதுவேட்பாளராகவா போட்டியிடுவார் என்பதை ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பின்னர்தான் அறியத்தருவோம்.

நாட்டிலுள்ள தற்போதைய அரசியல் தலைவர்களில் நாட்டுக்குத் தலைமை தாங்கக் கூடிய சிறந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே. இதை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பறைசாற்றிக் காட்டும்.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!