சமூக வலைத்தள பிரபலங்கள் மீது வருமானவரி விசாரணை! June 30, 2023 3:28 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest சமூக வலைத்தள பிரபலங்கள் மற்றும் யூ டியூப், இன்ஸ்டாகிராமில் படைப்புகளை உருவாக்கி வெளியிடுபவர்கள் ஆகியோர் கணிசமாக சம்பாதிப்பதாகவும், ஆனால் அந்த வருமானத்தை வருமான கணக்கில் காண்பிக்காமலோ அல்லது குறைத்து காண்பித்தோ வரிஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும் வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அத்தகைய பிரபலங்களுக்கு எதிராக வருமானவரித்துறை விசாரணையை தொடங்கி இருக்கிறது.கணிசமான வருவாய் இதுகுறித்து வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:- யூ டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில், சில பிரபலங்கள் தங்கள் படைப்புகள் மூலம் கணிசமாக சம்பாதிக்கிறார்கள். வர்த்தக பொருட்களுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வதன் மூலமும் வருவாய் ஈட்டுகிறார்கள்.ஆனால் இவற்றை வருமானவரி கணக்கில் காட்டுவது இல்லை. வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் ரூ.20 ஆயிரத்துக்கு மேல், வருமானம் ஈட்டினால், வரி செலுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.எனவே, அந்த பிரபலங்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கேரளாவில் சோதனை முதல்கட்டமாக, கேரளாவில், 10 யூ டியூப் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்களின் வீடுகளில் கடந்த வாரம் சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் நாகரிகமாக நடத்தப்பட்டனர். அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் நடிகர்களும் அடங்குவர்.இதுபோல், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள பிரபலங்களும் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். முதலில் நோட்டீஸ் அனுப்பி, முறையாக விசாரணை நடக்கிறது. மேலும், சில முன்னணி பிரபலங்களின் சமூக வலைத்தள செயல்பாடுகளை வருமானவரித்துறை கண்காணித்து வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…