வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது கனடா!- சாடுகிறார் அலி சப்ரி.

கனடா வாக்குவங்கி அரசியலை முன்னெடுக்கின்றது என்ற இந்தியாவின் கருத்தினை இலங்கை ஆதரித்துள்ளது.காலிஸ்தான் விவகாரத்தை கனடா வாக்கு வாங்கி அரசியலை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    
கனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் சமூக ஊடகமொன்றில் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கனடா வாக்குவங்கி அரசியலை நோக்கமாக கொண்டு செயல்படுகின்றது போல தோன்றுவதாக தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இதனை தனது டுவிட்டர் பதிவில் ஆமோதித்துள்ளார் வாக்குவங்கி அரசியல் வேறு என்ன என அலிசப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!