முதுகெலும்பற்ற அமைச்சரவை- சாடினார் மங்கள

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர் மங்களசமரவீரவிற்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவிற்கும் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள கொழும்பு டெலிகிராவ் நான் பார்த்ததில் இதுவே முதுகெலும்பற்ற அமைச்சரவை என விமர்சித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ரயில்வே தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பதற்கான யோசனையை அமைச்சர் ராஜித முன்வைத்தவேளையே இந்த விவாதம் மூண்டதாக கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.

எனினும் நிதியமைச்சர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியும் திறைசேரியும் ஊதிய உயர்வு தொடர்பான கொள்கையை ஒழுங்குபடுத்த தீர்மானித்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பள உயர்வு தொடர்பில் திடீர் முடிவுகளை எடுத்தால் ஏனைய துறையை சேர்ந்தவர்களும் சம்பள அதிகரிப்பை கோருவார்கள் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டை இவ்வாறான விதத்தில் நிர்வாகம் செய்ய முடியாது எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரயில்வே விவகாரத்திற்கும் அமைச்சர் ராஜிதவிற்கும் தொடர்பில்லாத போதிலும் அவர் தொடர்ந்தும் அமைச்சரவையில் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளார்

அமைச்சர் சரத்அமுனுகமவும் இதற்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளார்.

இதன்போதே நிதியமைச்சர் மங்களசமரவீர நான் பல அமைச்சரவைகளில் அங்கம் வகித்துள்ளேன் அவற்றில் இதுவே முதுகெலும்பற்ற அமைச்சரவை என குறிப்பிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!