ஒரு முறை பயன்படுத்தும் போத்தல்களில் குடிநீரை நிரப்பிக் குடிக்க வேண்டாம்! August 9, 2023 9:25 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்பி குடிக்க வேண்டாம் என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய ஒளிபடும் நிலையில் சில இரசாயனங்கள் தண்ணீரில் கலக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து குடிநீரை எடுத்துச் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் வைத்தியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவதை தவிர்த்து, கண்ணாடி அல்லது தரமான போத்தல்களை பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.பாடசாலைகளில் ஆசிரியர்கள் இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு போதுமான சுத்தமான குடிநீரை வழங்குவதை உறுதி செய்வது மிகவும் அவசியமெனவும் லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய வலியுறுத்தியுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…