தமிழ் சமூகம் சிதறுண்டு போகாமல் ஒன்றுபடுவோம் – ஐங்கரநேசன் !!


அரசு திட்டமிட்டு ஏற்படுத்தி வரும் சாதி,சமயப் பிளவுகளுக்குள் சிக்கி நாம் சிதறுண்டு போகாமல். நாம் எல்லோரும் தமிழர்கள் என்று ஒன்று பட்டு நின்றால் எமது இலட்சியத்தை நாம் அடைந்தேதீரலாம் இவ்வாறு தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமானபொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

கொக்குவில் நேதாஜி சனசமூக நிலையத்தின் ஆண்டுவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

ஆயுத ரீதியாக முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பல அரசியல்வாதிகள் தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து நழுவ ஆரம்பித்து விட்டார்கள். தாங்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து, வதைபட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் புறந்துள்ளி இலங்கைத் தேசியத்துக்குள் கரைய ஆரம்பித்து விட்டார்கள்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல், பலர் இலட்சியங்களைக் கைவிட ஆரம்பித்து விட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது என்றார். – Source: uthayan