சந்திரயான்-3 மனித குலத்திற்கான வெற்றி: பிரதமர் மோடி பேச்சு!

சந்திரயான் 3 வெற்றி மனித குலத்திற்கான வெற்றியாக பார்க்கப்படுவது பெருமையாக இருப்பதாக பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்வதற்காக இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி விண்வெளிக்கு ஏவப்பட்டது. இந்நிலையில், நேற்று சந்திரயான்-3 விண்கலம் இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
    
அத்துடன் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவரையும் நிலவின் மேற்பரப்பில் இந்தியா வெற்றிகரமாக இறக்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றி மனித குலத்திற்கான வெற்றியாக பார்க்கப்படுவது பெருமையாக இருப்பதாக பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். மேலும் வரலாற்று சாதனை படைத்த இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த உலக அறிவியல் அமைப்புக்கு இந்திய பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா உள்பட 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது, இதில் கூடுதலாக 6 நாடுகளை உறுப்பினராக இணைப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, அர்ஜென்டினா, எத்தியோப்பியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய 6 நாடுகளை அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் உறுப்பினராக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!