வாக்னர் தலைவர் மரணம் எதிர்பார்த்ததை விட தாமதம் தான்: எலான் மஸ்க்!

வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம் தான் எதிர்பார்த்ததை விட தாமதமாக ஏற்பட்டு இருப்பதாக டெஸ்லா நிறுவனர் மற்றும் ட்விட்டர் X -ன் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போரில் மிக முக்கிய பங்காற்றிய வாக்னர் கூலிப்படை சமீபத்தில் ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கியதை தொடர்ந்து அவை முற்றிலுமாக கலைக்கப்பட்டது.
    
அத்துடன் அதன் கூலிப்படை வீரர்கள் பெலாரஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் பயணித்த எம்ப்ரேயர் 600 வணிக ஜெட் ஒன்று ரஷ்யாவின் Tver பிராந்தியத்தில் உள்ள போலோகோவ்ஸ்கி மாவட்டத்தில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் உடன் சேர்த்து விமானத்தில் பயணம் செய்த 7 பணிகள் மற்றும் 3 விமானக் குழுவினர் என 10 உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம் நினைத்ததை விட தாமதமாக அரங்கேறி இருப்பதாக டெஸ்லா நிறுவனர் மற்றும் ட்விட்டர் X -ன் உரிமையாளர் எலான் மஸ்க் விமர்சனம் செய்துள்ளார்.

இதற்கிடையில் பிரிகோஜின் மரணம் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளனர். வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்ய உளவுத்துறையால் கொல்லப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பலர் முன்னரே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!