வடக்கின் கல்விப் பாரம்பரியம் போரினால் சீர்குலைவு!

கல்வி கற்பித்தலில், வடக்குக்கென ஒரு பாரம்பரியம் இருந்து வந்தது என்றும், போர்க்காலமும் போர்ப் பாதிப்பும் அதனைக் குழப்பி விட்டிருப்பதாகவும், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணிபுரிவதற்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் பொதுநூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று நடைபெற்ற போது, பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட முதலமைச்சர்,இவ்வாறு குறிப்பிட்டார்.

‘ வடமாகாணப் பாடசாலைகளில் பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும். கல்வி தான் எமது ஒரேயொரு திடமான பாதுகாப்பு.

பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவரும், தரம் 1 முதல் பட்டப்படிப்பு வரை, இலவசக் கல்வி முறையின் நன்மைகளைப் பெற்றுள்ளனர். அன்றைய ஆசிரியர்கள், சிறப்பான சேவைகளை ஆற்றியமையைப் போன்று, புதிய ஆசிரியர்களும் அவ்வாறு செயற்பட வேண்டுமெனவும் கோரினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!