கிரிக்கெட் நிர்வாகத்தால் ஏனைய விளையாட்டுக்களுக்கும் ஆபத்து – அர்ஜுன

கிரிக்கெட் நிர்வாகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள செயலாற்ற தன்மையினால் கிரிக்கெட் விளையாட்டு மட்டுமல்ல ஏனைய விளையாட்டுத் துறைகளும் கீழ்நிலைக்கு சென்றுவிடும் என பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

கண்டிக்கு ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு வழிபாடுகளை மேற்கொண்டு, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹா நாயக்க தேரர்களிட் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றும்போதே அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் பெற்றோலிய கூட்டத்தாபனத்துக்கு தேசிய விளையாட்டு வீரர்களை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தயாரித்தேன் ஆனால் அது அமைச்சரவையினால் நிராகரிக்கப்பட்டது. எனினும் எனது கடமையை நான் சரியாக செய்தேன். நான் இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தமைக்கு காரணம் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தேசிய விளையாட்டு வீரர்களுக்கு அரச வேலைவாய்ப்பை வழங்கும் நோக்குடன் தயாரித்த அமைச்சரவைப் பத்திரத்தை போன்றதேயாகும் என்றார்.

கேள்வி : தேசிய விளையாட்டு வீரர்களை அரசசேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு என்ன நடந்தது? இது நிராகரிக்கப்பட்டுவிட்டதா?

பதில்: உங்களுக்கு தெரியும் நான் அமைச்சரவையில் நடப்பவற்றை வெளியில் சொல்பவன் அல்ல. செய்தித்தாளில் சொல்லப்பட்டது அந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையினால் நிராகரிக்கப்பட்டதாக. நான் எனது கடமையை செய்தேன். ஆனால் நாங்கள் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை பாதுகாக்கும் வழிமுறை ஒன்று காணப்படவேண்டும். அதற்காகவே நான் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தேன். எனது கடமையை முறையாக செய்து முடித்தேன்.

கேள்வி : உங்களால் தேசியமட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுத்தர முடியுமா? இந்த அரசாங்கத்தால் தொடர்ந்து செல்ல முடியுமா?

பதில்: அரசாங்கமே இந்த முடிவை எடுத்தது. நான் யோசனையையே முன்மொழிந்தேன். கஷ்டப்படும் விளையாட்டு வீரர்களே என்னை காணவருகின்றனர். தேசிய மட்ட வீரர்களே இன்று தொழில் வாய்பபற்றுள்ளனர். எமது நாடு கிரிக்கெட் விளையாட்டின் காரணமாகவே பிரசித்தி பெற்றுள்ளது. அரசியல் காரணமாக அல்ல. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பெயரே முதலாவதாக உலக மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தது. பின்தங்கிய பிரதேசங்களிலேயே திறமை மிக்க வீரர்கள் காணப்படுகின்றனர். என்னல் முடிந்தது அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதாகும்.

கேள்வி : நீங்கள் சொல்கின்றீர்கள் இந்த அரசாங்கத்தில் கிரிக்கெட் கீழ்நிலைக்கு சென்றுவிட்டதென்று. அபப்படியென்றால் மற்றைய விளையாட்டுக்களுக்கு என்ன நேரிடும்?

பதில்: நான் நினைப்பது ஒரு பக்கத்தில் விளைளாயட்டு அமைச்சர்கள் கிரிக்கெட்டை கவனிக்கின்றனர் தவிர ஏனைய விளையாட்டுக்களை அல்ல. மறுபக்கத்தில் பார்த்தால் கிரிக்கெட்டினாலேயே இலங்கை பிரசித்தி பெற்றது. நான் பொறுப்புடன் சொல்கின்றேன் இன்று எமது கிரிக்கெட் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாம் உயர்ந்த இடத்தில் இருந்தோம் ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானை விட கீழ்நிலையில் இருக்கின்றோம் கிரிக்கெட்டில். எனக்குத் தெரியவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வாரா இல்லையா என்பது.

கேள்வி : தற்போது இலங்கை கிரிக்கெட் அணி கடுமையான சவால்களை எதிர்நோக்கின்றது. முன்னாள் அதிகாரிகள் இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்று. இதை தவிர்ப்பதற்கு ஏதாவது வழியுள்ளதா?

பதில் : அதிகாரிகளின் நியமனம் தொடர்பான நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன. புதிய விளையாட்டுத்துறை அமைச்சரும் இதுதொடர்பாக ஆராய என்னை அழைத்திருந்தார். நான் பார்ப்பது விளையாட்டுத்துறை அமைச்சரிடம் அதிகாரம் இல்லை கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றத்தை எற்படுத்த. எனினும் அவரே விளையாட்டுத்துறை அமைச்சர், அவருக்கு தெரியவில்லை கிரிக்கெட் விளையாட்டும் அவரின் அமைச்சின் கீழ் என்பது. அவரும் ஜனாதிபதி சட்டத்தரணி ஆவார். நான் சட்டத்தரணி அல்ல, ஆனால் எனக்கு விளையாட்டு சட்டம் பற்றிய அறிவு உண்டு. விளையாட்டு சட்டத்திற்கமைய தகுதியானவர்களே இலங்கை கிரிக்கெட் சபையில் இருக்க வேண்டும். முன்னாள் மற்றும் இன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் விளையாட்டு சட்ட்திற்கமைய தகுதிவய்ந்த நபர்களை கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைத்துக்கொள்ளவில்லை. அவர்களுக்கு பொறுப்புண்டு எதிர்கால சந்ததியினருக்காக சரியான வழிமுறையை நடைமுறைப்படுத்த. முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தேவையற்ற நபர்களை கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை. சில அமைச்சர்கள் உறுதியான முடிவுகளை எடுப்பார்களாக என எனக்குத் தெரியவில்லை.

கேள்வி : உங்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததல்லவா?

பதில்: இல்லை, எனக்கு அமைச்சுப் பதவியை எடுக்கும் எண்ணம் இருக்கவில்லை. ஜனாதிபதி என்னை விளையாட்டுத்துறை அமைச்சை பொறுப்பேற்க சொன்னார். ஆனால் நான் அதை நிராகரித்து விட்டேன். நான் துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது அங்கு இடம்பெற்ற ஊழலை தடுத்தேன். ஜனாதிபதியே தனது பாராளுமன்ற உரையில், துறைமுகம் பெரும் இலாபம் மீட்டும் அமைப்பாக மாறியதாக தெரிவித்திருந்தார். இது எனது அமைச்சின் காலப்பகுதியிலேயே இடம்பெற்றது.

கேள்வி : ஆனால் நீங்கள் கிரிக்கெட்டை பற்றி குறைகூறுகிறீர்களே? பதில்: கிரிக்கெட் என்பது எனது வாழ்க்கையின் ஒரு பக்கம். கிரிக்கெட் கீழ்நிலைக்கு செல்லும் போது எனக்கு உரிமையுண்டு அது பற்றி பேச. சிலநேரத்தில் விளையாட்டுதறை அமைச்சு நினைக்கலாம் எனக்கு இது பற்றி பேச உரிமை இல்லை என்று. நான் கிரிக்கெட்டை பற்றி பேசாவிட்டால் பொதுமக்கள் என்னை மோசமாக நினைப்பார்கள். நான் எனது குரலை உயர்த்துவேன சூதாட்டக்காரர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்குள் வந்தால் நான் எதிர்ப்பார்ப்பது விளையாட்டு சட்டத்தில் ஒரு திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என்பது. குறிப்பாக இந்நிய உயர் நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது கிரிக்கெட் நிர்வாக சபை வாக்குள் எண்ணிக்கையை 40 இலிருந்து 20ஆக குறைக்க வேண்டும் என்று. ஏனைய நாடுகளில் 10 அல்லது 15 வாக்குகளே. ஆனால் இலங்கைளில் 150 வாக்குகள் காணப்படுகின்றன. சில கிரிக்கெட் குழுக்கள் காணப்படுகின்றன. ஆனால் அவர்கள் விளையாடுவதில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சித்தார்த் வெடமுனி, குமார் சங்ககார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியாரும் கிரிக்கெட் விளையாட்டு சட்டத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!