கருணாநிதியின் மகனின் கருத்தால் பெரும் பரபரப்பு

திமுகவில் தொண்டர்கள் எனக்குதான் அதிகம் என கருணாநிதியின் மகன் அழகிரி பரபரப்பு கருத்தை சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நினைவிடத்திற்கு தனது குடும்பத்தினரோடு சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் நிருபர்களிடம் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

என்னுடைய தலைவர் கலைஞரின் உண்மையான உடன்பிறப்புகள் எனது பக்கமே உள்ளனர் தமிழகத்தில் உள்ள அனைத்து திமுக விசுவாசிகளும் எனது பக்கமே உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அழகிரியின் இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை—எந்த நெருக்கடி யாரிடமிருந்து வந்தாலும் கருணாநிதியின் மகன் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கவேண்டாம் என கட்சியின் சிரேஸ்ட தலைவர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவின் பின்னர் முதல்தடவையாக நாளை திமுகவின் செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் திமுகவின் நிர்வாகப்பதவிகளில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக தலைவராக ஸ்டாலினை தெரிவுசெய்வது குறித்த பொதுக்குழுவின் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்துவது பற்றிய இறுதி முடிவுகள் நாளை எடுக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன

இதேவேளை அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான முயற்சி குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அதிருப்தியடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக ஸ்டாலினை சந்தித்து பேசிய அவர் எந்த நெருக்கடி வந்தாலும் குடும்பத்திற்குள் யார் நெருக்கடி தந்தாலும் அழகிரியை சேர்த்துக்கொள்ளவேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!